search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் கைது"

    ஆலப்பாக்கத்தில் இன்சூரன்சு நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. படுக்கை அறையில் உள்ள ஏ.சி. கிரில்லை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர்.

    இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    சிறுவர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    இரணியல் அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

    இரணியல்:

    இரணியலை அடுத்த நெய்யூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுனில்பிரகாஷ் (வயது 55). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் நின்ற 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டிச் சென்றிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை களையும் அமைத்திருந்தனர். தனிப்படையினர் நேற்று கண்டன்விளை சந்திப்பில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு 2 சிறுவர்கள் சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும், அவர்கள் சுனில்பிரகாஷ் என்பவர் வீட்டில் சந்தன மரங்களை வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து பாளையங் கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

    கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வக்கிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வினோத் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வளசரவாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறித்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    வளசரவாக்கம் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இதையடுத்து வளசர வாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் சிலர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காரம்பாக்கம் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் 17 வயதுக்குட்பட்ட வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும் தனியாக செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான 16 மற்றும் 14 வயதுடைய மதுரவாயல், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களையும் பிடித்தனர்.

    கைதான 4 பேரிடம் இருந்தும் 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலையூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளில் சேர்த்தனர்.
    சென்னை:

    அனகாபுத்தூரை சேர்ந்த ப்ரீத்தி (20). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சேலையூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நேற்று காத்து நின்றார். செல்போனில் பேசியபடி நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ப்ரித்தி போலீசில் புகார் செய்தார். குரோம்பேட்டை போலீஸ் சானடோரியத்தில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செல்போனை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். போலீசில் சிக்கிய2 சிறுவர்களும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவன் ஐ.டி.ஐ.யும், மற்றொருவன் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர்.

    பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி கூறக்கூடாது என மாணவியை சிறுவர்கள் மிரட்டினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதுப்பற்றி சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் ஒரு சிறுவன், அத்திப்பட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். #Tamilnews
    ×